‘பாகுபலி 3’ கண்டிப்பாக உருவாகும் - ராஜமவுலி உறுதி

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்துக்காக, ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ என்ற பெயரில் அனிமேஷன் வெப் தொடர் உருவாகியுள்ளது.வரும் 17-ல் வெளியாக இருக்கும் இதை, கிராஃபிக்ஸ்இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி, ஹைதராபாத்தில் நடந்தது.

இதில் கலந்துகொண்ட இயக்குநர் ராஜமவுலி கூறும்போது, “பாகுபலி படத்துக்கு எப்போதும் என் மனதில் இடம் உண்டு. அதன் புரமோஷனுக்கு அதிகம் செலவழித்ததாகச் சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை. மொத்த பணத்தையும் படத்தின் தயாரிப்புக் காகவே செலவழித்தோம். டிஜிட்டல் போஸ்டர் மற்றும் வீடியோக்களை உருவாக்க எங்கள் மூளையை மட்டுமே பயன்படுத்தினோம். கதாபாத்திரங்களையும் மேக்கிங் வீடியோக்களையும் வெளியிட்டோம். அதுவே பெரிய விளம்பரங்களை கொடுத்தன. ‘பாகுபலி 3’-ம் பாகம் எப்போது உருவாகும் என்று கேட்கிறார்கள். ‘ஆர்ஆர்ஆர்’ படம் முடிந்ததுமே அதை தொடங்கி இருக்க வேண்டும். தள்ளிப் போய் விட்டது. கண்டிப்பாக ‘பாகுபலி 3’ படம் உருவாகும். பிரபாஸுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்