65-வது தேசிய திரைப்பட விருதுகள்: ஃபஹத் பாசிலுக்கு சிறந்த துணை நடிகர் விருது

By செய்திப்பிரிவு

65-வது தேசிய திரைப்பட விருதுகளில், ஃபஹத் பாசிலுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. அதில், ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும்’ மலையாளப் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது ஃபஹத் பாசிலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

திலீஷ் போத்தன் இயக்கிய இந்தப் படம், கடந்த வருடம் ஜூன் மாதம் 30-ம் தேதி வெளியானது. இதுவரை இரண்டு கேரள அரசு விருதுகளை வென்றுள்ள ஃபஹத் பாசிலின் முதல் தேசிய விருது இது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE