துல்கர் சல்மான் நடித்த ‘சீதாராமம்’ படம் மூலம் தென்னிந்தியாவிலும் பிரபலமானவர் இந்தி நடிகை மிருணாள் தாக்குர். அவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படம் கடந்த 5-ம் தேதி வெளியாகி இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனது பெற்றோர் சம்மதிக்காததால் சில வாய்ப்புகளை இழந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “முத்தக்காட்சி உட்பட நெருக்கமான காட்சிகளில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. என் பெற்றோர்களும் அதை ஏற்க மாட்டார்கள். அப்படி காட்சிகள் இருந்ததால் சில பட வாய்ப்புகளை இழந்தேன். பிறகு எவ்வளவு காலம்தான் தவிர்த்துக் கொண்டே இருக்க முடியும்?
அதுபற்றி என் பெற்றோரிடம் விளக்கினேன். அது, என் விருப்பம் இல்லை, நடிப்பு என்பதைப் புரிய வைத்தேன். ஒரு நடிகராக நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். சில நேரங்களில், அது காட்சிகளின் தேவையாக இருக்கின்றன. உங்களுக்கு அந்தக் காட்சி வசதியாக இல்லை என்றால் நீங்கள் இயக்குநரிடம் சொல்லலாம்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago