‘சினிமா பன்டி’ இயக்குநருடன் கைகோக்கும் அனுபமா - ‘பரதா’ முதல் தோற்றம் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் ‘பரதா’ (Paradha) தெலுங்கு படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்ற தெலுங்கு திரைப்படம் ‘சினிமா பன்டி’. இப்படத்தின் இயக்குநர் பிரவீன் கந்த்ரேகுலா அடுத்து அனுபமா பரமேஸ்வரனை வைத்து இயக்கும் படத்துக்கு ‘பரதா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தில் கவனம் பெற்ற தர்ஷனா ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கோபி சுந்தர் படத்துக்கு இசையமைக்கிறார்.

முதல் தோற்ற வீடியோ: இப்படத்தின் முதல் தோற்றத்துடன் கூடிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சுற்றி பெண்கள் நின்றுகொண்டிருக்க நடுவில் அனுபமா முகத்தை மூடியபடி நின்றுகொண்டிருக்கிறார். பின்னர் அவரது மூடிய முகம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிகிறது. முன்னதாக கண்களை மூடிய கடவுளின் சிலை ஒன்று காட்டப்பட்டு பக்தி பாடல் ஒலிக்கப்படுகிறது.

இந்த வீடியோவை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை அனுபமா, “முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய கதை மற்றும் கதாபாத்திரத்துடன் உங்களை சந்திக்கிறேன். இப்படம் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பதை உறுதியளிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். முதல் தோற்ற வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்