திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லால், ஷோபனா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மோகன்லாலின் 360-வது படமாக உருவாகும் இப்படத்தை ‘ஆப்ரேஷன் ஜாவா’, ‘சவுதி வெல்லக்கா’ ஆகிய படங்களை இயக்கி தருண் மூர்த்தி இயக்குகிறார். இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஷோபனா, மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கும் 56-வது படம் இது என்பதை நடிகை ஷோபனா தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 2020-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘வரனே அவஷ்யமுண்ட்’ (Varane Avashyamund) படத்தில் நடித்திருந்த ஷோபனா அதன்பிறகு நடிக்கவில்லை. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் மலையாள சினிமாவுக்கு திரும்பியுள்ளார். மோகன்லால் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மலைக்கோட்டை வாலிபன்’ பெரிய அளவில் அவருக்கு கைகொடுக்கவில்லை.
» பாடகி உஷா உதூப், நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு பத்ம பூஷன் விருது - குடியரசுத் தலைவர் வழங்கினார்
» பகடியும் அதிரடியும்! - Deadpool & Wolverine ட்ரெய்லர் எப்படி?
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. மோகன்லாலும், ஷோபனாவும் இருக்கும் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago