சென்னை: மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த ‘பிரேமலு’ படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் ‘தண்ணீர் மத்தான் தினங்கள்’, ‘சூப்பர் சரண்யா’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘பிரமேலு’. நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு நடித்துள்ள இப்படத்துக்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். மேத்யூ தாமஸ், ஷ்யாம் புஸ்கரன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். ஃபஹத் பாசில், ஷ்யாம் புஸ்கரன், திலேஷ் போத்தன் ஆகிய மூவரும் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ரூ.10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் படம், உலக அளவில் ரூ.130 கோடி வரை வசூலித்தது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தற்போது காணக் கிடைக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டூடியோஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago