சென்னை: ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள ‘ஆவேஷம்’ மலையாள திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் வசூல் ரீதியாக மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘ரோமாஞ்சம்’. இதன் இயக்குநர் ஜித்து மாதவன் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘ஆவேஷம்’ இதில் ஃபஹத் ஃபாசில், மன்சூர் அலிகான், ஆஷிஷ் வித்யாத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சுஷின் ஷ்யாம் இசையமைக்கும் இப்படத்தை ஃபஹத் ஃபாசில் அண்ட் ஃப்ரெண்ட்ஸ் மற்றும் அன்வர் ரஷீத் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
கடந்த 11-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 5 நாட்களை கடந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.20 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே மலையாள சினிமா பாக்ஸ் ஆஃபீஸில் கலக்கி வருகிறது. ‘பிரம்மயுகம்’, ‘பிரேமலு’, ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படங்களைத் தொடர்ந்து ‘ஆவேஷம்’ ரூ.50 கோடி பாக்ஸ் ஆஃபீஸில் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. > விமர்சனத்தை வாசிக்க: Aavesham Review: ஃபஹத்தின் புது ‘அதகள’ அவதாரமும், ஆச்சரிய அனுபவமும்!
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago