டோவினோ தாமஸ் தயாரிப்பில் பசில் ஜோசப் நடிக்கும் ‘மரண மாஸ்’

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: டோவினோ தாமஸ் தயாரிப்பில் பசில் ஜோசப் நடிக்கும் ‘மரண மாஸ்’ மலையாள படத்தின் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

பசில் ஜோசப் நடிப்பில் அண்மையில் வெளியான மலையாள படம் ‘பலிமி’ (Falimy). திரையரங்குக்குப் பிறகு இப்படம் ஓடிடி வெளியீட்டில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பசில் ஜோசப் அடுத்ததாக நடிக்கும் படத்துக்கு ‘மரணமாஸ்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

மலையாள படமான இதனை நடிகர் டோவினோ தாமஸ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். ராஜேஷ் மாதவன், சிஜு சன்னி மற்றும் சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு ஜெய் உன்னிதன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வாழைப்பழத்தில் படத்தின் டைட்டில் எழுதப்பட்டுள்ளது. படம் காமெடி ஜானரில் உருவாக உள்ளது. படத்தின் டைட்டில் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் ‘மின்னல் முரளி’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது டோவினோ தாமஸ் தயாரிப்பில் பசில் ஜோசப் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்