கொச்சி: பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன். இவர் நடித்த ‘மாளிகைப்புரம்’ தமிழிலும் வரவேற்பைப் பெற்றது. தமிழில் இவர் ‘சீடன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்போது சூரி, சசிகுமார் நடிக்கும் ‘கருடன்’ படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் நடித்துள்ள ‘ஜெய் கணேஷ்’ என்ற மலையாளப் படம் 11-ம் தேதி வெளியாகிறது. ரஞ்சித் சங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மஹிமா நம்பியார் நாயகியாக நடித்துள்ளார்.
இதில், முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் வருபவராக உன்னி முகுந்தன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸை முன்னிட்டு, தனது அறக்கட்டளை மூலம், 100 சக்கர நாற்காலிகளை தேவையானவர்களுக்கு அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இதுபற்றி அவர், “என் மனதைத் தொட்ட படம் இது. கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் முடிந்த குறைந்தபட்ச உதவி இது” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago