சென்னை: “எனக்கு மைக்கேல் ஜாக்சனின் பயபோபிக்கை இயக்க ஆசை. ஆனால், அவர் கதாபாத்திரத்தில் நடிக்க, எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் என்பது தான் கேள்வி” என இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “சிலசமயம் பயோபிக் எடுக்கலாம் என நினைத்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக மைக்கேல் ஜாக்சனின் பயோபிக்கை இயக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஆனால், அவருடைய கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்பது தான் கேள்வி. அப்படி ஒரு நடிகர் கிடைத்தால் நிச்சயம் அந்தப் படத்தை ஹாலிவுட்டுக்கு கொண்டு செல்வேன். ஆங்கிலத்தில் அந்தப் படத்தை இயக்குவேன்.
மைக்கேல் ஜாக்சன் சுவாரஸ்யமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து சென்றுள்ளார். அவரது குழந்தைப் பருவம், பள்ளிப் படிப்பு மற்றும் அவர் எப்படி தனது தோலின் நிறத்தை மாற்றினார் என பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அது ஒரு சிறந்த பயணம் மற்றும் சிறந்த கதையாக இருக்கும். ஆனால், அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அளவுக்கு சரியான நடிகராக யார் இருப்பார் என்பது மட்டும் தான் கேள்வி.
அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க வேண்டும் என்பது எனது கனவு. அந்தப் படத்தை எல்லோரும் வந்து பார்ப்பார்கள். தவிர, வேறு யார் இயக்கினாலும் நானும் திரையரங்கு சென்று படத்தை பார்ப்பேன். காரணம் எனக்கு அவரைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
» “வாக்குக்கு பணம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஆனால்...” - விஜய் ஆண்டனி கருத்து
» “கவலைப்பட வேண்டாம்; அது புதுப்பட தோற்றம்” - வைரல் போட்டோவுக்கு ஜாக்கி சான் விளக்கம்
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago