சென்னை: டோவினோ தாமஸ் நாயகனாக நடித்துள்ள ‘நடிகர்’ மலையாள படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. லால் ஜூனியர் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நடிகர்’. சௌபின் ஷாஹிர், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யாக்சன் கேரி மற்றும் நேஹா நாயர் ஆகியோர் இசையமைத்துள்ளனர். மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசர் எப்படி?: டேவிட் படிக்கல் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டாராக நடித்துள்ளார் டோவினோ தாமஸ். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் என்பதை அவரது தோற்றமும், செயல்பாடுகளும் உறுதி செய்கின்றன. சௌபின் ஷாஹிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எதிர்மறை கதாபாத்திரமாக இருக்கும் எனத் தெரிகிறது.
அலட்சியம், கவலையற்ற தன்மை, அதிகாரத்துடன் வலம் வரும் ஒரு நடிகரின் வளர்ச்சியைம், வீழ்ச்சியையும் இந்தப் படம் பேசும் என்பதை ட்ரெய்லரின் காட்சிகள் உணர்த்துகின்றன. டோவினோவின் கெட்டப்பும், பின்னணி இசையும் கவனம் பெறுகிறது.
தலைப்பு மாற்றம்: முன்னதாக, இந்தப் படத்துக்கு ‘நடிகர் திலகம்’ என பெயரிடப்பட்டிருந்தது. ஆனால், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் அடைமொழி என்பதால் பின்பு இப்பெயர் மாற்றப்பட்டது.
» ரூ.100 கோடி வசூலை எட்டியது ‘ஆடுஜீவிதம்’!
» லோகேஷ் கனகராஜின் ‘ரஜினி 171’-ல் நடிக்க ரன்வீர் சிங்குடன் பேச்சுவார்த்தை!
இது தொடர்பாக பிரபு பேட்டி ஒன்றில் கூறுகையில், “ரசிகர்கள் சிலர் என்னை தொடர்பு கொண்டு கேரளாவில் இந்தப் பெயரில் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னபோதுதான் எனக்குத் தெரிந்தது. நான் நடிகர் லாலை தொடர்பு கொண்டு பேசினேன். அவரது மகன் தான் இப்படத்தை இயக்குவதாக தெரிவித்தார். படத்தின் பெயரை வேறு ஏதாவது பெயராக மாற்றும்படி கேட்டுக் கொண்டேன். நான் அவர்களை வற்புறுத்தவில்லை. ஆனால், அவர் மாற்றிக்கொண்டார்கள்” என தெரிவித்திருந்தார். டீசர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago