விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம்: சலார் தயாரிப்பாளர் இழப்பீடு

By செய்திப்பிரிவு

கே.ஜி.எஃப் படங்களுக்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கிய படம், ‘சலார்; பார்ட் 1 சீஸ் ஃபயர்’. இதில் பிரபாஸ் ஹீரோவாக நடித்தார். பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு, பாபி சிம்ஹா, மைம் கோபி உட்பட பலர் நடித்திருந்தனர். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலை அள்ளியது. சில பகுதிகளில் நஷ்டத்தையும் சந்தித்தது.

ஆந்திராவில் சில விநியோகஸ்தர்கள் அதிக விலை கொடுத்து இந்தப் படத்தை வாங்கி இருந்தனர். அவர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த விநியோகஸ்தர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்கவில்லை என்றாலும் படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், அவர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார். ‘சலார்’ தயாரிப்பாளரின் இந்தச் செயலை ஆந்திர விநியோகஸ்தர்கள் பாராட்டி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

41 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்