சென்னை: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 109-வது படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ படமும், பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படமும் ஒரே நாளில் வெளியாகின. அப்போது தமிழில் ‘வாரிசு’, ‘துணிவு’ படங்கள் வெளியாகியிருந்தன. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிப்பில் ‘பகவந்த் கேசரி’ வெளியானபோது, விஜய்யின் ‘லியோ’ வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது ‘வால்டர் வீரய்யா’ பட இயக்குநர் பாபி கொல்லி இயக்கும் புதிய படத்தில் பாலகிருஷ்ணா நடிக்கிறார். அவரது 109-வது படமாக உருவாகும் இப்படத்துக்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
கிளிம்ஸ் எப்படி? - காட்டில் தீ பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. பின்னணியில் மெலோடியான இசை ஒலிக்கிறது. இசை வேகமெடுக்க, தண்ணீர் வரும் அணைகளில் தீ வழிந்தோடுகிறது. காரிலிருந்து கையில் பெட்டியுடன் இறங்கும் பாலகிருஷ்ணா அதை துறந்து அதிலிருக்கும் மதுவை குடிக்கிறார்.
» யாசகர் போல்... - தனுஷின் 51-வது படம் ‘குபேரா’ முதல் தோற்றம்
» காவி உடை, கையில் உடுக்கை: தமன்னாவின் ‘ஒடேலா 2’ முதல் தோற்றம் வெளியீடு
உடனே, எதிரிகள், “போரை அறிவிக்கிறாயா?” என கேட்க, “குள்ளநரிகளை சிங்கம் துரத்தினால் அதற்கு பெயர் போரல்ல... வேட்டை” என கர்ஜிக்கிறார் பாலகிருஷ்ணா. அடுத்து கையில் உள்ள கோடரிகளால் பின்னால் ஒருவரை ஹேங்கர் போல தூக்கிப்பிடிக்க மற்றவரை ஸ்டாண்டு போல பயன்படுத்தி அதன் மேல் கால் வைத்து போஸ் கொடுக்கிறார். அத்துடன் வீடியோ முடிகிறது. பாலகிருஷ்ணா ரசிகர்களுக்கு தொடர் ட்ரீட் நிச்சயம். கிளிம்ஸ் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago