பெர்லின்: “நீங்கள் கண்டிப்பாக ‘புஷ்பா’ படத்தின் 3-வது பாகத்தையும் எதிர்பார்க்கலாம். அதன் சீக்வல்களை உருவாக்க விரும்புகிறோம்” என நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமான ‘புஷ்பா: தி ரூல்’ படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெர்லின் திரைப்பட விழாவில் ‘புஷ்பா தி ரைஸ்’ படம் திரையிடப்பட உள்ளது. தற்போது அல்லு அர்ஜுன் படக்குழுவுடன் பெர்லினில் உள்ளார். படத்தின் 3-ஆவது பாகம் குறித்து பேசிய அவர், “நீங்கள் நிச்சயமாக ‘புஷ்பா’ படத்தின் 3-வது பாகத்தை எதிர்பார்க்கலாம்.
அதன் அடுத்த சீக்வல்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். அதற்கான அற்புதமான ஐடியாக்கள் எங்களிடம் உள்ளன. புஷ்பா 2-வது பாகம் முதல் பாகத்தை விட வித்தியாசமாகவும், புதுவித அனுபவமாகவும் இருக்கும். காரணம் உள்ளூரில் இருந்த கதைக்களம், இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் விரிவடைந்துள்ளது.
புஷ்பா முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரி பன்வர் சிங் ஷெகாவத் கதாபாத்திரத்தில் நடித்து ஃபஹத் ஃபாசில், இந்த பாகத்தில் புஷ்பாவுக்கு பெரும் சவாலாக இருப்பார். மேலும் இருவருக்குமான மோதல் மிகப் பெரிய அளவில் இருக்கும்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago