ஹைதராபாத்: நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி உள்ள ‘குண்டுர் காரம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வரும் 12-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது.
த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கி உள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடைசியாக கடந்த 2022 மே மாதம் சர்காரு வாரி பாட்டா திரைப்படம் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்திருந்தது.
ட்ரெய்லர் எப்படி? ட்ரெய்லரின் பெரும்பாலான ஃப்ரேம்களில் ஆக்ஷன் நிரம்பி வழிகிறது. மாஸ்.. மாஸ்.. பக்கா மாஸ் என சொல்லும் வகையில் உள்ளது. 2.47 நிமிடம் ரன் டைம் கொண்ட இந்த ட்ரெய்லரில் தாயை ஒரு சிறுவன் பிரிகிறார். அடுத்த சில நொடிகளில் மகேஷ் பாபு என்ட்ரி கொடுக்கிறார். சிவப்பு நிற ஜீப்பில் ஸ்டைலாக வந்து இறங்குகிறார். ‘பாத்த உடனே மஜா ஆச்சா? ஹார்ட்-ரேட் எகிறிச்சா? விசில் அடிக்கணும்னு தோணுச்சா’ என வசனம் பேசுகிறார். நடிப்பு, நடனம் என மகேஷ் பாபு மிரட்டுகிறார். அம்மா - மகன் இடையிலான கதை போல காட்சி அமைப்புகள் உள்ளன. வாழ்க்கை அதிசயம் நிறைந்தது என ட்ரெய்லர் நிறைவடைகிறது.
» “தமிழக நிதி அமைச்சர் வரி குறித்த புரிதல் இல்லாமல் பேசி வருகிறார்” - அண்ணாமலை @ தருமபுரி
» பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் | சர்ச்சை கருத்து தெரிவித்த 3 மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட்
முக்கிய செய்திகள்
சினிமா
27 mins ago
சினிமா
16 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago