“சிங்கம் போல நின்றவர்” - விஜயகாந்துக்கு மோகன்லால், பவன் கல்யாண் புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகரும் தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் இருவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மோகன்லால்: சிறந்த நடிகரும், நேர்மையான அரசியல்வாதியும், கனிவான மனிதருமான விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரது இழப்பின் வலியைப் பகிர்ந்து கொள்ளும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

பவன் கல்யாண்: புரட்சிக் கலைஞர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் என்பதை அறிந்து வேதனை அடைகிறேன். விஜயகாந்தின் படங்கள் தெலுங்கு ரசிகர்களாலும் விரும்பப்படுகிறது. 2005ல் விஜயகாந்த் கட்சியை அறிவித்த நாளில், மதுரையில் படப்பிடிப்பில் இருந்தேன். அங்குள்ள மக்கள் புரட்சியை, சந்தோஷத்தை நேரடியாக பார்த்தேன்.

சூழல்களுக்கு எதிராக சிங்கம் போல நின்றவர் விஜயகாந்த். சினிமாவில் உள்ள சிலரால் அவமானங்களை சந்தித்தாலும் அவர் பின்வாங்கவில்லை. யாருக்கும் அஞ்சாமல் எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் பக்கம் நின்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்