வட்டார வழக்கில் பேச சாய் பல்லவிக்கு பயிற்சி

By செய்திப்பிரிவு

நடிகை சாய் பல்லவி இப்போது தெலுங்கில், 'தண்டேல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். சேகர் கம்முலா இயக்கிய ‘லவ் ஸ்டோரி’ படத்துக்கு பிறகு இவர்கள் இந்தப் படத்தில் மீண்டும் இணைகின்றனர். படத்தை சந்து மொண்டேடி இயக்குகிறார். இவர், கார்த்திகேயா, கார்த்திகேயா 2, பிரேமம் ரீமேக் உட்பட சில தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் நாக சைதன்யா மீனவராக நடிக்கிறார். சாய் பல்லவி மீனவப் பெண்ணாக நடிக்கிறார். இதற்காக அவருக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்ட வட்டார வழக்கில் பேசப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இயக்குநர் சந்து மொண்டேடி கூறும்போது, “படத்தில் நாயகிக்கும் முக்கியத்துவம் உள்ளது. அதனால் பயிற்சிப் பட்டறைகளில் அவர் கலந்துகொண்டார். சிறப்பு பயிற்சியாளரிடம் ஸ்ரீகாகுளம் வட்டார வழக்கில் பேச பயிற்சி அளிக்கப்பட்டது. அர்ப்பணிப்போடு அதை அவர் கற்றுக்கொண்டார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்