படங்களின் தோல்வியால் வருத்தமில்லை: நாக சைதன்யா

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நடிகர் நாக சைதன்யா, பார்வதி, பிரியா பவானி சங்கர், பிராச்சி தேசாய், பசுபதி உட்பட பலர் நடித்துள்ள வெப் தொடர் ‘தூத்தா’ (Dhootha). விக்ரம் கே குமார் இயக்கியுள்ள இந்த சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் தொடர், அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாக சைதன்யாவிடம் அவரின் இந்தி அறிமுகம் சரியாக அமையாதது பற்றிக் கேட்கப்பட்டது.

அவர் கூறும்போது, “எனது இந்தி அறிமுகமான ‘லால் சிங் சத்தா’ சரியான வரவேற்பைப் பெறவில்லை என்று கேட்கிறார்கள். அதனால் எனக்கு வருத்தம் ஏதுமில்லை. அந்தப் படத்தில் ஆமிர்கானுடன் நடித்ததில் கற்றுக்கொண்டது அதிகம். அந்தப் படம் தனிப்பட்ட முறையில் எனக்குக் கொடுத்ததும் அதிகம். அதனால் அதில் நடித்ததில் மகிழ்ச்சிதான். வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் சகஜம். வெற்றி தோல்வி இரண்டையும் சுயபரிசோதனை செய்துகொள்வது முக்கியம். அதைத் திரும்பிப் பார்ப்பதை விட்டுவிட்டுக் கடந்து செல்வது முக்கியம்” என்றார் நாக சைதன்யா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

30 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்