பிருத்விராஜின் ‘ஆடு ஜீவிதம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கொச்சி: பிருத்விராஜ் நடித்துள்ள திரைப்படம், ‘ஆடு ஜீவிதம்’. விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை பிளெஸ்ஸி இயக்கியுள்ளார். ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், அமலா பால், கே.ஆர்.கோகுல், அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி, ரிக்காபி உட்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ். சுனில் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

பென்யாமின் எழுதி மலையாளத்தில் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக பிருத்விராஜ் உடல் எடையை குறைத்து நடித்துள்ளார். கேரளாவில் இருந்து அரபு நாட்டுக்கு வேலைக்குச் செல்லும் நஜீப் என்பவருக்கு ஆடு மேய்க்கும் வேலை கிடைக்கிறது. அங்கு அவர் சந்திக்கும் கொடுமைகள்தான் இந்தப் படத்தின் கதை. கடந்த சில வருடங்களாகத் தயாரிப்பில் இருக்கும் இதன் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த வருடம் ஏப்.10-ம் தேதி, இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்