கேரள பெண்கள் கிரிக்கெட் அணியின் தூதுவராக கீர்த்தி சுரேஷ் நியமனம்

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரள பெண்கள் கிரிக்கெட் அணிக்கான விளம்பர தூதுவராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

‘மாமன்னன்’, ‘போலா ஷங்கர்’ படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், ‘ரகுதாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘தெறி’ ஆகிய படங்கள் லைன் அப்பில் இருக்கின்றன. படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர் தற்போது கேரளாவின் பெண்கள் கிரிக்கெட் அணிக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள கிரிக்கெட் சங்கம் (KCA) மகளிர் அணிக்கான விளம்பர தூதுவரை நியமிப்பது இதுவே முதல்முறை.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில், நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இணையதள நுழைவுச்சீட்டு விற்பனையை கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் இந்திய அணியில் இடம்பெற்ற முதல் கேரள வீரர் என்ற பெருமை பெற்ற மின்னு மணி கலந்துகொண்டார்.

அவரை பாராட்டி பேசினார் கீர்த்தி. ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த மின்னுவுக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. டி20 தொடருக்காக வங்க தேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் மின்னு இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தகது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE