விஜய் தேவரகொண்டா வீட்டில் தீபாவளி கொண்டாடினாரா ராஷ்மிகா?

By செய்திப்பிரிவு

நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்தி படமான 'அனிமல்’ டிச.1ம் தேதி வெளியாகிறது. இப்போது, ‘புஷ்பா 2’, தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘ரெயின்போ’, ராகுல் ரவீந்திரன் இயக்கும் ‘கேர்ள் ஃபிரண்ட்’ படங்களில் நடித்து வருகிறார். அவர் தீபாவளி வாழ்த்துக்கூறி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாகவும் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஷ்மிகா வெளியிட்டுள்ள புகைப்படமும் நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ள புகைப்படமும் ஒரே வீட்டில், ஒரே பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். இருவரும் ஒன்றாகத் தீபாவளியைக் கொண்டாடியிருப்பதாகக் கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் விஜய் தேவரகொண்டா வீட்டு மாடியில் இருந்து ராஷ்மிகா வெளியிட்ட புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

சினிமா

35 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

மேலும்