கல்யாணி பிரியதர்ஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மலையாள படமான ‘சேஷம் மைக்-ல் பாத்திமா’ (Sesham Mike-il Fathima) படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் மனு சி குமார் இயக்கியுள்ள இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஹெஷாம் அப்துல் வஹாப் படத்துக்கு இசையமைத்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் தவிர்த்து, ஃபெமினா ஜார்ஜ், அனீஷ் ஜி மேனன், ஷாஹீன் சித்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ‘தள்ளுமலா’ படத்துக்குப் பிறகு கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - சர்வதேச போட்டிகளை தவிர்த்து உள்ளூர் விளையாட்டு போட்டிகளில் பெரும்பாலும் ஆண்களின் கமென்ட்ரியே இடம்பெறும். அதனை மாற்றியமைத்து பெண் ஒருவர் கமென்ட்ரி செய்தால் எப்படியிருக்கும் என்ற சுவாரஸ்ய கதைகளத்துடன் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் மனு சி குமார். ‘கமென்ட்ரி தான் ஒரு போட்டிக்கு ஆத்மா. அது இல்லாமல் எப்படி போட்டியை நடத்துவது’ என ட்ரெய்லரின் தொடக்கத்தில் ஒருவர் கேட்க, இன்ட்ரோ தருகிறார் கல்யாணி பிரியதர்ஷன். முதலில் மறுத்து பின் ஒப்புக்கொண்டு ஃபுட் பாலுக்கு கமென்ட்ரி செய்கிறார். பின்னர் அதனை தன் கனவாக்கி கொள்கிறார்.
அதற்கான காட்சிகள் ட்ரெய்லரில் கவனம் பெறுகின்றன. சர்வதேச போட்டிகளுக்கு அவர் கமென்ட்ரி செல்ல ஆசைப்படும்போது குடும்பமும் மற்றவர்களும் எதிர்க்கின்றனர். அதற்கான போராட்டத்தில் வென்று, எப்படி தனது கனவுகளை எட்டிப்பிடிக்கிறார் என்பதை ட்ரெய்லரின் காட்சிகள் உணர்த்துகின்றன. ட்ரெய்லர் படத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் வரும் நவம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரெய்லர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago