பெங்களூரு: பிரபல கன்னட நடிகை குட்டி ராதிகா என்ற ராதிகா குமாரசாமி . இவர் தமிழில் ‘இயற்கை’, ‘மீசை மாதவன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது நடிக்கும் படம்,'பைர தேவி'. இதில் அவர் அகோரியாக நடிக்கிறார். ரமேஷ் அரவிந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரங்கையனா ரகு, ரவிசங்கர், ஸ்கந்தா அசோக், அனு முகர்ஜி, மாளவிகா அவினாஷ் , சுசீந்திரா பிரசாத் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஸ்ரீ ஜெய் கதை , திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்தப் படத்துக்கு ஜே. எஸ். வாலி ஒளிப்பதிவு செய்கிறார். கே. கே. செந்தில் பிரசாத் இசை அமைக்கிறார். வாரணாசி, காசி, ஹரித்வார், ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன.
இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அகோரிகள் சிலருடன் ராதிகா ஒரு சடலத்தின் மேல் அமர்ந்து பூஜை செய்யும் காட்சி மிரள வைக்கிறது.இந்தியாவின் முதல் பெண் அகோரி திரைப்படம் இது எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago