ஆஸ்கர் விருதுக்கான சிறப்பு மேற்பார்வைக் குழுவில் நடிகர் ராம் சரண்

By செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கார் விருதுகள் வழங்கவும் மற்றும் அதனை மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட குழுவில் தெலுங்கு நடிகர் ராம் சரண் இடம்பெற்றுள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்த படம், ‘ஆர்ஆர்ஆர்’. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில், கடந்த ஆண்டு வெளியான இந்தப் படம், ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது.

இந்த நிலையில், ஆஸ்கார் விருதுகள் வழங்கவும் மற்றும் அதனை மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் என்ற குழுவில் நடிகர் ராம் சரண் இடம்பெற்றுள்ளார். இதனை ஆஸ்கர் விருதுக் குழு தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்தக் குழுவில் உலகம் முழுவதும் 398 கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடித்த ஜூனியர் என்டிஆர் ஏற்கெனவே இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

ஆஸ்கரு குழு வெளியிட்டுள்ள பதிவில், ராம் சரணுடன் லஷானா லின்ச், விக்கி க்ரீப்ஸ், லூயிஸ் கூ டின்லோக், கேகே பாமர், சாங் சென், சகுரா ஆண்டோ மற்றும் ராபர்ட் டாவி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE