இயக்குநர் அல்ஃபோன்ஸ் தான் சினிமாவிலிருந்து விலகுகிறேன் என பதிவிட்டு பின் அந்தப் பதிவை தனது சமூக வலைதள பக்கங்களிலிருந்து நீக்கியுள்ளார். இருப்பினும் அதன் ஸ்கிரீன்ஷாட் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக இன்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “என்னுடைய திரையுலக வாழ்க்கையை நிறுத்திக்கொள்கிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதை நேற்று தான் கண்டறிந்தேன். நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் குறைந்தபட்சம் ஓடிடி அளவிலான குறும்படங்கள், பாடல்கள், வீடியோக்களை தொடர்ந்து இயக்குவேன்.
நான் சினிமாவிலிருந்து வெளியேற விரும்பவில்லை. ஆனால் எனக்கு வேறு வழியுமில்லை. என்னால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நான் கொடுக்க விரும்பவில்லை. உடல்நலம் பலவீனமாகவோ அல்லது கணிக்க முடியாததாகவோ இருக்கும்போது, வாழ்க்கை 'இன்டர்வல் பஞ்ச்' போல திருப்பத்தைக் கொடுத்துவிடுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து இந்த பதிவு பேசுபொருளானதும் அதை டெலீட் செய்துள்ளார். இருப்பினும் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து அவரது ரசிகர்கள் விரைவில் அல்போன்ஸ் குணமாக வேண்டும் என பிரார்த்திப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
» நவ.1 விஜய்யின் ‘லியோ’ வெற்றிவிழா: காவல்துறை அனுமதி என தகவல்
» “என் மனைவிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த முதல்வருக்கு நன்றி” - இயக்குநர் விக்ரமன்
.
முன்னதாக அல்போன்ஸ் புத்திரன் ‘கோல்டு’ படத்துக்குப் பிறகு இளையராஜா இசையமைக்கும் ‘கிஃப்ட்’ படத்தை இயக்கி வருவதாக அறிவித்திருந்தார். இப்படத்தில் சாண்டி, கோவை சரளா, சஹானா சர்வேஷ் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அந்தப்படம் குறித்த வேறு அப்டேட் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
52 mins ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago