சிவராஜ்குமார் நடித்துள்ள ‘கோஸ்ட்’ கன்னட படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
எம் ஜி ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ள இப்படத்தை சந்தேஷ் நாகராஜ் தனது சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ளார். அனுபம் கெர், ஜெயராம், பிரசாந்த் நாராயண், அர்ச்சனா ஜோயிஸ், சத்யபிரகாஷ் மற்றும் தத்தன்னா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இப்படத்துக்கு மகேந்திர சிம்ஹா ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபு எஸ் குமார் படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி?: ‘யுத்தம் மனித குலத்துக்கு ஆறாத காயத்தை கொடுக்கும்’ என வசனத்துடன் தொடங்கும் ட்ரெய்லரில் சிவராஜ்குமார் இன்ட்ரோ கொஞ்சம் கொஞ்சமாக காட்டப்படுகிறது. மாஸான காட்சிகளுடன் நடந்து வரும் சிவராஜ்குமார் ஈர்க்கிறார். துப்பாக்கிச்சத்தம் அதிகம் ஒலிக்கும் ட்ரெய்லரில் தோட்டாக்கள் தெறிக்கின்றன. ஜெயராமின் சர்ப்ரைஸ் தோற்றம் கவனம் பெறுகிறது. வன்முறை அதீதமாக கொண்ட ட்ரெய்லர் படத்தின் தரத்தை உணர்த்துவதோடு ‘மாஸ்’ ஆக்ஷன் என்டர்டெயினர் என்பதை உறுதி செய்கிறது. படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் ‘லியோ’ படமும் அதே நாள் வெளியாகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
சினிமா
41 mins ago
சினிமா
53 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago