‘லியோ’ உடன் மோத தயாராகும் பாலையாவின் ‘பகவந்த் கேசரி’

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: அனில் ரவிபுடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் வரும் அக்.19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பாலகிருஷ்ணாவின் 108-வது படமாக உருவாகியுள்ள படம் ‘பகவந்த் கேசரி’ இப்படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். காஜல் அகர்வால், ஸ்ரீலீலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷைன்ஸ் ஸ்கீரின் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தமன் இசையமைத்துள்ள இந்தப் படம் ஆக்‌ஷன் என்டர்டெயினராக உருவாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். மேலும் ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே தேதியில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படமும் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

மேலும்