மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ மிரட்டலான முதல் தோற்றம் வெளியீடு

By செய்திப்பிரிவு

நடிகர் மம்மூட்டியின் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் ‘பிரமயுகம்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான ‘பூதகாலம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ராகுல் சதாசிவம் இயக்கும் புதிய படம் ‘பிரமயுகம்’. மம்மூட்டி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைக்கிறார். இந்நிலையில், பான் இந்தியா முறையில் வெளியாகும் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேல்சட்டை இல்லாமல் நாற்காலி ஒன்றில் அமர்ந்திருக்கும் மம்மூட்டியின் சிரித்த முக்கத்துடன் கூடிய வில்லன் லுக் மிரட்டலாக இருக்கிறது. குறிப்பாக, கறைபடிந்த பற்களுடன் கூடிய சிரிப்பும், ப்ளாக் அண்ட் ஒயிட் தோற்றமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மம்மூட்டியின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி இந்தத் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்