கார் விபத்தில் இசையமைப்பாளர் மரணம்

By செய்திப்பிரிவு

கோவை அருகே நடந்த கார் விபத்தில் இசை அமைப்பாளர் தஷி உயிரிழந்தார். அவருக்கு வயது 49.

தஞ்சை மாவட்டம் வாட்டாக்குடியை சேர்ந்தவர் தஷி என்கிற சிவகுமார். ‘அச்சன்டே பொன்னுமக்கள்’, மோகன்லால் நடித்த ‘பகவான்’, ‘டர்னிங் பாய்ன்ட்’ உட்பட 60-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கு இசையமைத்துள்ள தஷி, தமிழில் ‘மாணவன் நினைத்தால்’, ‘பயணங்கள் தொடரும்’, ‘என் பெயர் குமாரசாமி’, ‘அலையாத்தி காடு’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

இவர் தனது நண்பர்களுடன் கேரளா சென்றுவிட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அவிநாசி பழங்கரை அருகே வந்தபோது காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் தஷியும் அவர் நண்பர் தமிழ் அடியானும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மறைந்த தஷிக்கு மனைவி கோமளா, மகன்கள் ரங்கராஜ், கிரண் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்