பிரபாஸின் ‘சலார்’ ட்ரெய்லர் செப்டம்பர் 6 வெளியீடு?

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் ட்ரெய்லரை செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இதில் ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம், செப். 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகிறது.

இப்படம் ‘கேஜிஎஃப்’ யுனிவர்ஸின் ஓர் அங்கமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதனால், இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படத்தின் டீசர் கடந்த ஜூலை 6ஆம் தேதி வெளியாகி யூடியூபில் 129 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்றும் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE