‘இது உண்மையில் ஸ்பெஷல்’ - வைரலாகும் விஜய் தேவரகொண்டா பதிவு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் நடித்துள்ள ‘குஷி’ படம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்நிலையில், அவர் ஆணும், பெண்ணும் கை கோத்த நிலையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘நிறைய நடக்கிறது, ஆனால், இது உண்மையில் ஸ்பெஷலானது, விரைவில் அறிவிக்கிறேன்’ எனக் கூறியுள்ளார். இதனால் இது அவரது திருமண அறிவிப்பாக இருக்கலாம் என்றும் புதிய பட அறிவிப்பாகவும் இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவை விஜய் தேவரகொண்டா காதலித்து வருவதாகச் சில வருடங்களாகக் கூறப்பட்டு வருகிறது. ‘குஷி’ படப்பிடிப்பில் சமந்தாவுடன் அவர் நெருக்கமாக இருந்ததாகவும் கூறப்பட்டது. ‘குஷி’ பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், தனது திருமணம், காதல் திருமணமாகத்தான் இருக்கும் என்று கூறியிருந்தார். இதனால் விஜய் தேவரகொண்டாவின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்