செயின், கிருதா, கூலிங் க்ளாஸ்... - ஃபஹத் ஃபாசிலின் ‘கேங்க்ஸ்டர்’ கெட்டப் வைரல்

By செய்திப்பிரிவு

நடிகர் ஃபஹத் ஃபாசிலின் புது கெட்டப் இணையத்தில் வைரலாகி வருகிறது. கழுத்தில் செயினும், கிருதாவும், கூலிங் க்ளாஸுமாக அவரின் கேங்க்ஸ்டர் கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடைசியாக ஃபஹத் ஃபாசிலை ‘ரத்னவேலு’ கதாபாத்திரத்தில் ‘மாமன்னன்’ படத்தில் பார்த்தோம். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என உள்ளூர் அரசியல்வாதியாக அட்டகாசம் செய்திருந்தார். இதையடுத்து, இதற்கு அப்படியே நேர்மாறான லுக் ஒன்று ஃபஹத் ஃபேன்ஸால் கொண்டாடப்படுகிறது.

கருப்பு சட்டையில் கிருதாவுடன் ரவுடி கெட்டப்பில் இருக்கிறார். மலையாளத்தில் அண்மையில் வசூல் ரீதியாக மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘ரோமாஞ்சம்’. இந்தப் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன். இவர் அடுத்ததாக இயக்கும் படம் ‘ஆவேஷம்’ (Aavesham). இந்தப் படத்தில் நடிக்கும் ஃபஹத்தின் லுக்குதான் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் நஸ்ரியா நசீம், மன்சூர் அலிகான், ஆஷிஷ் வித்யாத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சுஷின் ஷ்யாம் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்