சென்னை: 'மெல்பெர்ன் இந்திய திரைப்பட விழா 2023' விருதை வென்றது 'சீதா ராமம்' திரைப்படம். இதன் மூலம் 'சீதா ராமம்' படத்துக்கு மற்றொரு சர்வதேச விருது கிடைத்துள்ளது.
துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் ‘சீதா ராமம்’. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தை ஹனுராகவ புடி இயக்கியிருந்தார். காதல் கதையாக உருவான இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தது.
பி. எஸ். வினோத் ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பரவலான வெற்றியையும் வரவேற்பினையும் பெற்றது. ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மெல்பெர்ன் நகரில் இந்திய திரைப்பட விழா சிறப்பாக நடைபெறுகிறது. 14வது மெல்பெர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் பிரிவில் போட்டியிட்ட 'சீதா ராமம்' படம் அதற்கான விருதை வென்றுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago