டிசம்பரில் வெளியாகிறது மோகன்லாலின் ‘பரோஸ்’

By செய்திப்பிரிவு

கொச்சி: நடிகர் மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘பரோஸ்’. ஃபேன்டஸி கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா , ரபேல் அமர்கோ உட்பட பலர் நடிக்கின்றனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார். குழந்தைகளைக் கவரும் விதமாக உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைக்கிறார். 3டி-யில் உருவாகும் இந்தப் படம், பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது.

ஜிஜோ புன்னூஸ் எழுதிய 'பரோஸ்: கார்டியன் ஆஃப் டி'காமா'ஸ் ட்ரெஷர்’ என்ற நாவலின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. வாஸ்கோட காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதைதான் இந்தப் படம் என்கிறார்கள்.

இந்தப் படத்தின் ஒரு பகுதி பின்னணி இசை பணிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துள்ளன. அடுத்த பகுதி பணிகள் ஹங்கேரியில் நடந்து வருகின்றன. டிசம்பரில் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

34 mins ago

சினிமா

45 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்