இயக்குநர் ஷங்கர், ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் கியாரா அத்வானி நாயகி. அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் உட்பட பலர் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
யாரும் எதிர்பார்க்காத வகையிலும் வியக்கும் வகையிலும் பாடல் காட்சிகளைப் படமாக்கும் ஷங்கர், இந்தப் படத்துக்காகவும் புதுமையான காட்சிகளைஅமைத்திருக்கிறார் என்கிறார்கள். அதற்காக இத்தனை கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்தப் படம் பற்றி கியாரா அத்வானி கூறும்போது, “இரண்டு வருடங்களாக மொத்தக் குழுவும் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. இந்த வருட இறுதிக்குள் படம் முடிந்துவிடும். இயக்குநர் ஷங்கரிடம் இருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். ‘கேம் சேஞ்சர்’ அற்புதமாக உருவாகி வருகிறது.அனைவரின் எதிர்பார்ப்பையும் தாண்டி இந்தப்படம் இருக்கும்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago