கொச்சி: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘ஜெயிலர்’. தமன்னா, சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன் சுனில் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் வரும் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில் ‘ஜெயிலர்’ என்ற பெயரில் மலையாளத்திலும் ஒரு படம் தயாராகி உள்ளது. சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தியான் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள இந்தப் படமும் வரும் 10-ம் தேதி வெளியாகிறது. இதனால் மலையாளத்தில் மட்டுமாவது ‘ஜெயிலர்’ படத்தின் தலைப்பை மாற்றுமாறு சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சக்கீர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்துக்குக் கேரளாவில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மலையாள ‘ஜெயிலர்’ படத்துக்கு 75 திரையரங்குகள் கேட்டும் கொடுக்கப்படவில்லை. இதனால் இதன் இயக்குநர் சக்கீர் மடத்தில், கேரள பிலிம் சேம்பர் அலுவலக வாயிலில் தனியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டார். கையில், ‘மலையாள சினிமாவை காப்பாற்றுங்கள்’ என்ற பதாகையை வைத்திருந்தார். தமிழ் சினிமாவின் ஆதிக்கத்தால், மலையாள சினிமா மூச்சுத் திணறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago