பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘ப்ரோ’ தெலுங்கு திரைப்படம் ரூ.100 கோடி வசூலை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் ‘வினோதய சித்தம்’. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் சமுத்திரக்கனி. தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர்.
தெலுங்கு ரசிகர்களுக்காக பல்வேறு மாற்றங்களுடன் தயாராகியுள்ள இப்படம் கடந்த 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் 3 நாட்கள் ரூ.87 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படம் ரூ.100 கோடி க்ளப்பில் இணைய உள்ளது. குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவில் பவன் கல்யாணின் ரசிகர்களால் படத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago