ராணா டகுபதி தயாரிப்பில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘காந்தா’

By செய்திப்பிரிவு

ராணா டகுபதி தயாரிப்பில் துல்கர் சல்மான் நடிக்கும் தெலுங்கு படத்துக்கு ‘காந்தா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.

துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து ‘கிங் ஆஃப் கோதா’ படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் நடிக்கிறார். பணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இதையடுத்து நடிகர் ராணா டகுபதி இயக்கும் புதிய படத்தில் நடிக்க துல்கர் ஒப்பந்தமாகியுள்ளார். படத்துக்கு ‘காந்தா’ (Kaantha) என பெயரிடப்பட்டுள்ளது. செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார்.

இது தொடர்பாக ராணா டகுபதி, “நல்ல சினிமாவை நினைவூட்டி ஈர்க்கும் கதைகளை அரிதாகவே கண்டறிகிறோம். அப்படியான ஒரு படைப்பு ‘காந்தா’. மிகவும் திறமையான துல்கர் சல்மானுடன் இந்தப் பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

மேலும்