ஹைதராபாத்: இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்துக்கு ‘லக்கி பாஸ்கர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. துல்கரின் பிறந்த நாளையொட்டி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘வாத்தி’. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியான இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். படத்தில் சம்யுக்தா, சமுத்திரகனி, மொட்டை ராஜேந்திரன், சாரா, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.100 கோடி வசூலைக்கடந்தது. கல்வியின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதையடுத்து, இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கவுள்ள புதிய படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஃபார்ச்சூன் 24 நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்குகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
» “புரொமோஷனில் கலந்துகொள்ளாதது நயன்தாராவின் விருப்பம்” - நடிகர் விஷால்
» 15 வருடங்களுக்குப் பிறகு பெண் தோற்றத்தில் நடிக்கும் கமல்ஹாசன்?
படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். துல்கர் சல்மானின் பிறந்தநாளையொட்டி படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘லக்கி பாஸ்கர்’ என பெயரிடப்பட்டுள்ள படத்தின் அறிவிப்பு போஸ்டர் பணத்தின் நடுவே துல்கர் சல்மான் மறைந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. பணத்தை மையப்படுத்தி கதை இருக்கும் என்பதை போஸ்டரும், டைட்டிலும் உறுதி செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago