ஹைதராபாத்: “நான் நடிகர் அல்லு அர்ஜூனின் மிகப் பெரிய ரசிகை. அவரது எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன்” என தோனியின் மனைவி சாக்ஷி தெரிவித்துள்ளார்.
தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம், தமிழில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தை தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் ரமேஷ் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகை நதியா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு மலையாள இசையமைப்பாளர் விஸ்வஜித் இசையமைத்துள்ளார். படம் வரும் ஜூலை 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதேசமயம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிட உள்ளனர்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த படத்தின் புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட சாக்ஷி தோனியிடம் ‘நீங்கள் தெலுங்கு படங்களை பார்ப்பீர்களா?’ என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “நான் நடிகர் அல்லு அர்ஜூனின் தீவிர ரசிகை. அவரின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். அந்தப் படங்கள் ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸில் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், அவையெல்லாமே யூடியூப்பில் Goldmine Productions என்ற சேனலில் காணக்கிடைகின்றன. அவர்கள் எல்லா தெலுங்கு படங்களையும் ஹிந்தியில் டப் செய்து வெளியிடுகின்றனர். ஆக, நான் அல்லு அர்ஜூன் படங்களை பார்த்து தான் வளர்ந்திருக்கிறேன்” என்றார்.
மேலும் அவரிடம், ‘பிரபாஸ், அல்லு அர்ஜூன், பவன் கல்யாண் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களை தயாரிக்கலாமே?’ என கேட்டதற்கு, “அந்த அளவுக்கு என்னிடம் நிதி ஆதாரமில்லை. பெரிய பட்ஜெட்டில் படம் இருக்க வேண்டும், அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும். நான் இப்போது என்னுடைய முதல் முயற்சியை தொடங்கியிருக்கிறேன். முதலில் ஒரு வலிமையான அடித்தளத்தை அமைத்துகொள்கிறேன்” என்றார்.
» ரஜினியின் ‘ஜெயிலர்’ பட 3-வது சிங்கிள் பாடல் ‘ஜுஜுபி’ புதன்கிழமை ரிலீஸ்
» அட்லீ - ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய்!
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago