மும்பை: நாக் அஸ்வின் இயக்கத்தில், அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உட்படப் பலர் நடிக்கும் படம், ‘புராஜெக்ட் கே’. இதில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். வைஜெயந்தி புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் தலைப்பு 'கல்கி 2898 கி.பி' என தற்போது மாற்றப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் தோற்ற வீடியோ, அமெரிக்காவின் சான் டியாகோவில் நடைபெற்ற காமிக் கான் விழாவில் வெளியிடப்பட்டது.
இந்த விழாவில் கமல்ஹாசன், பிரபாஸ், நாக் அஸ்வின், ராணா உட்படப் பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில் இதில் நடித்துள்ள அமிதாப் பச்சன், இந்த விழாவில் கலந்துகொள்ளாதது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
“இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று இயக்குநர் நாக் அஸ்வின் கேட்டுக்கொண்டார். ஆனால், வேலை மற்றும் மருத்துவக் கட்டுப்பாடுகளால் செல்ல இயலவில்லை. இந்தப் படத்தின் முதல் தோற்றம் சிறப்பாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று தெரித்துள்ளார் அமிதாப் பச்சன்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago