ஹைதராபாத்: கமல்ஹாசன், பிரபாஸ் நடிக்கும் ‘புராஜெக்ட் கே’ படத்துக்கு ‘கல்கி 2898 AD' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கும் படம் ‘புராஜெக்ட் கே’. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சயின்ஸ் ஃபிக்ஷன் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் காமிக் கான் நிகழ்வில் ‘புராஜெக்ட் கே’ படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு ‘கல்கி 2898 AD' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ஹாலிவுட்டின் ‘ஸ்டார் வார்ஸ்’, ‘ட்யூன்’ பாணியிலான காட்சியமைப்புகளுடன் இப்படம் உருவாகியுள்ளது. படத்தில் பசுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவில் கமல்ஹாசன் தொடர்பான காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. சமீபத்தில் படத்தில் பிரபாஸின் தோற்றம் வெளியாகி இணையத்தில் கேலி செய்யப்பட்ட நிலையில், தரமான கிராபிக்ஸுடன் வெளியாகியுள்ள இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago