கொச்சி: டொவினோ தாமஸ் நடித்த ‘மின்னல் முரளி’ கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் காமிக்ஸ் ஒன்று வெளியாகவுள்ளது.
பேசில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் நடித்த படம் ‘மின்னல் முரளி’. சூப்பர் ஹீரோ கதைக்களத்தைக் கொண்ட இப்படம் கடந்த 2021ல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்திய பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இப்படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டு தெரிவித்தனர். உலகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ‘மின்னல் முரளி’ நெட்ஃப்ளிக்ஸ் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது. மார்வெல், டிசி காமிக்ஸுக்கு நிகரான ஓர் இந்தியப் படைப்பு என்று பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் இப்படத்துக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், ‘மின்னல் முரளி’ சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் தற்போது காமிக்ஸ் வடிவில் வெளியாகவுள்ளதாக ‘மின்னல் முரளி’ தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதனை தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் அமர்சித்ர கதா, டிங்கிள் காமிக் ஸ்டூடியா மற்றும் ஸ்பிரிட் மீடியா ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
டிங்கிள் காமிக்ஸ் என்ற புத்தகத்தில் ‘மின்னல் முரளி’ காமிக்ஸ் கதைகள் இனி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காமிக்ஸ் அமெரிக்காவில் இன்று நடக்க உள்ள காமிக் கான் நிகழ்வில் வெளியியாகிறது. மார்வெல், டிசி பாணியில் ‘மின்னல் முரளி’ கதாபாத்திரத்தைச் சுற்றி ஒரு தனி யுனிவர்ஸை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
» தமிழ்த் திரைப்படங்களில் தமிழக தொழிலாளர்களையே பயன்படுத்த வேண்டும்: பெப்சி
» ட்ரோல் எதிரொலி: பிரபாஸின் பழைய போஸ்டரை நீக்கி புதியதை வெளியிட்ட ‘புராஜெக்ட் கே’ படக்குழு
முக்கிய செய்திகள்
சினிமா
21 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago