‘மாநாடு’ இந்தி ரீமேக்கில் ராணா

By செய்திப்பிரிவு

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்த படம் ‘மாநாடு’. கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி அமரன். எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகரன் உட்பட பலர் நடித்திருந்தனர். 2021-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.

டைம் லூப் ஜானரில் உருவான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை இந்தி, தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்ய போட்டி நிலவியது. தெலுங்கில் ரவிதேஜாவும் இந்தியில் வருண் தவணும் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இதன் இந்தி ரீமேக்கில் ராணா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சிம்பு கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் வில்லன் கேரக்டர் முக்கியத்துவம் கொண்டது என்பதால், அதற்கு பிரபலமான நடிகர் ஒருவரை நடிக்க வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்