கொச்சி: டோவினோ தாமஸ் நடிக்கும் ’நடிகர் திலகம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று கொச்சியில் தொடங்கியது.
பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ். இவர் தமிழில் தனுஷின் ‘மாரி 2’ படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த ‘மின்னல் முரளி’, ’2018’ ஆகிய படங்கள் தமிழிலும் வரவேற்பைப் பெற்றன. இவர் அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘நடிகர் திலகம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரித்விராஜ், சுராஜ் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற ‘டிரைவிங் லைசென்ஸ்’ படத்தை இயக்கிய லால் ஜூனியர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் டேவிட் படிக்கல் என்ற சூப்பர் ஸ்டார் நடிகராக டோவினா தாமஸ் நடிக்கிறார். இதில் சவுபின் சாகிர், பாவனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’, சிரஞ்சீவி நடித்த ‘வால்டர் வீரைய்யா’, பாலகிருஷ்ணா நடித்த ‘வீரசிம்மா ரெட்டி’ உட்பட பல மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதன் மூலம் இந்நிறுவனம் மலையாளத்தில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கொச்சியில் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் டொவினோ தாமஸ் நடிக்கும் முதல் காட்சி இன்று படமாக்கப்பட்டது. இதில் சவுபின் சாகிர், லால், அனூப் மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago