நடிகர் அல்லு அர்ஜுன் ‘அலா வைகுண்டபுரமுலு’ பட இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் நான்காவது முறையாக இணைய உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் ‘ஜூலாய்’, ‘S/O சத்தியமூர்த்தி’ மற்றும் ‘அலா வைகுண்டபுரமுலு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் ‘அலா வைகுண்டபுரமுலு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தக்கூட்டணி நான்காவது முறையாக மீண்டும் இணைகிறது. ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது. பெயரிடப்படாத இந்தப் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுனை பொறுத்தவரை அவர், ‘புஷ்பா: தி ரூல்ஸ்’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். தொடர்ந்து கொரட்டாலா சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸை பொறுத்தவரை தற்போது அவர் மகேஷ்பாபுவை வைத்து ‘குண்டூர் காரம்’ படத்தை இயக்கி வருகிறார். ‘குண்டூர் காரம்’ படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
» ஜூலை 6-ல் பிரபாஸின் ’சலார்’ டீசர் ரிலீஸ்
» ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படப்பிடிப்பு நிறைவு - தீபாவளிக்கு திரைக்கு வருகிறது
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
14 mins ago
சினிமா
48 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago