தெலுங்கு நடன இயக்குநர் ராகேஷ் மாஸ்டர் மறைவு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத் : தெலுங்கு நடன இயக்குநர் ராகேஷ் மாஸ்டர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன் தினம் காலமானார். அவருக்கு வயது 53.

திருப்பதியை சேர்ந்த ராகேஷ் மாஸ்டரின் இயற்பெயர் ராமாராவ். சினிமாவுக்காக ராகேஷ் என்று பெயரை மாற்றி வைத்துக்கொண்ட இவர், வெங்கடேஷ், நாகார்ஜுனா, மகேஷ் பாபு, பிரபாஸ், ராம் பொத்தினேனி உட்பட தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார். 1,500-க்கும்அதிகமான படங்களில் பணியாற்றியுள்ள இவர், விசாகப்பட்டினத்துக்குப் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டு இரு தினங்களுக்கு முன் ஹைதராபாத் திரும்பினார். வந்ததுமே உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார். நீரிழிவுக்காக டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்று வந்துள்ள ராகேஷின் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

6 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

மேலும்