ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் இணைந்தார் கியாரா அத்வானி

By செய்திப்பிரிவு

ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடித்து 2019-ம் ஆண்டு வெளியான படம், ‘வார்’. யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஸ்பை யுனிவர்ஸ் படமான இதில் வாணி கபூர் நாயகியாக நடித்திருந்தார். ரூ.170 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ரூ.475 கோடிக்கு மேல் வசூலித்தது. சித்தார்த் ஆனந்த் இயக்கிய இந்தப் படத்தின் 2-ம் பாகம் இப்போது உருவாகிறது.

பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார். இதை அயன் முகர்ஜி இயக்குகிறார். இவர், ‘பிரம்மாஸ்த்ரா’ படத்தை இயக்கியவர். இந்தப் படத்துக்கு சில கதாநாயகிகளிடம் பேசி வந்தனர். இந்நிலையில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இவர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் இப்போது நடித்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்