‘சலார்’ படக்குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் தலா ரூ.10,000 அன்பளிப்பாக கொடுத்துள்ளார் நடிகர் பிரபாஸ். அவரின் இந்தச் செயல் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
‘ஆதிபுருஷ்’ படத்துக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் நடிக்கும் படம் ‘சலார்’. இந்தப் படத்தை ‘கேஜிஎஃப்’ புகழ் பிரசாந்த் நீல் இயக்குகிறார். படத்தில் ஸ்ருதி ஹாசன், பிரித்விராஜ், ஜகபதி பாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் படத்துக்கு இசையமைக்கிறார். ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ படங்களை தயாரித்த ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் பிரபாஸ் இந்தப் படத்துக்காக இரவு பகல் பாராமல் உழைத்த படக்குழுவினருக்கு தலா 10,000 ரூபாய் அன்பளிப்பாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படக்குழுவைச் சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து ரசிகர்கள் பிரபாஸின் இந்தச் செயலை பாராட்டி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago