விமான நிலையத்தில் பெண் பயணியிடம் தவறாக நடந்ததாக புகார்: நடிகர் விநாயகன் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

கேரளா: மலையாள நடிகர் விநாயகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த மே 27-ம் தேதி கோவா - கொச்சி செல்லும் இன்டிகோ விமானத்துக்காக கோவா விமான நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது வீடியோ பார்த்துகொண்டிருந்த என்னிடம் மலையாள நடிகர் விநாயகன் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தார். மேலும், அவர் என்னிடம் தன்னை வீடியோ எடுப்பதாக கூறி தொந்தரவு செய்தார். நான் அவரிடம் ‘உங்களை வீடியோ எடுக்கவில்லை என்றும், வேண்டுமென்றால் என் மொபைலை பார்த்துக்கொள்ளுங்கள்’ என சொல்லியும் அவர் விடவில்லை.

தொடர்ந்து தவறாக நடந்துகொண்டார். இது தொடர்பாக விமான நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால்தான் மன உளைச்சலுக்கு ஆளானேன். விநாயகன் மீது நடவடிக்கை எடுக்க இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், விநாயகனை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

37 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

மேலும்